கட்டுநாயக்கவில் பிடிப்பட்ட நாசகார பொருட்கள். 2 தாய்லாந்து நாட்டினர் கைது
சுமார் ஐந்து கோடி பதின்மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய இரண்டு தாய்லாந்து நாட்டவர்களாவர். இவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் இறைச்சி வெட்டுபவர்களாகப் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். அங்கு அவர்களின் இரண்டு பயணப் பைகளுக்குள் இருந்த விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் 'குஷ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment