Header Ads



இலங்கை எதிர்கொள்ளும் எந்த நெருக்கடி வேளையிலும், இந்தியா எப்போதும் உறுதியாகத் துணைநிற்கும்


இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடி வேளையிலும் இந்தியா எப்போதும் அந்நாட்டுடன் உறுதியாகத் துணைநிற்கும் என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


தனது கன்னி விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்தடைந்த அவர்,கொழும்பில் நடைபெற்ற இந்திய வம்சாவளி மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.


இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளே இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.