பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சி
கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தெஹிவளை, கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைக் குழுக்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் ஹோட்டல்களை அமைக்க ஷிரான் பாஸிக்கிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் அருந்திக பெர்னாண்டோவிடம் அதிகாரிகளால் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
பாஸிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் 3 முன்னணி அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் நாட்களில் நேரடியாக வாக்குமூலம் பெற விசாரணைக் குழுக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.
வெள்ளவத்தை முதல் தெஹிவளை, கல்கிஸ்ஸ கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஹோட்டல்களை நீக்கப் போவதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment