நாமல் ஒரு அப்பாவியா...?
நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் இன்றைய தினம் (04.09.2026) முன்னிலையாகியுள்ளார். விசாரணைக்கு செல்வதற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாங்கள் எந்த நேரத்திலும் சுதந்திரமான விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பயந்தால், விசாரணைக்கு வரமாட்டோம். என்னை வரச் சொன்னால் நான் எப்போதும் வருவேன். அதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இன்று, துரதிஷ்டவசமாக, இந்த நாட்டில் பொலிஸார் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் திகதி நாமல் ராஜபக்ச வந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த நாட்டின் விவசாயிகளுக்காகவும், நாட்டிற்காகவும், நமது படையின் வெற்றிக்காகவும் ஒரு பெரிய கூட்டம் வரும் என்றார்.

Post a Comment