விஜித ஹேரத், UAE அமைச்சர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன..?
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மனிதவள மற்றும் எமிரேட்மயமாக்கல் அமைச்சர் Dr அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னான் அல் அவாரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் நலன், கண்ணியம் மற்றும் உரிமைகளை உறுதி செய்வதில் இரு தரப்பினரும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மனிதவள மற்றும் எமிரேட்மயமாக்கல் அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Post a Comment