Header Ads



பயணியின் வயிற்றுக்குள் 7 மில்லியன் பெறுமதியான நாசகார பொருட்கள்


கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கியபடி இலங்கைக்கு வந்த உகண்டா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


உகண்டாவின் விமான நிலையத்திலிருந்து செப்டெம்பர் 12 ஆம் திகதி கட்டாரின் டோஹா நகரைச் சென்றடைந்துள்ளதுடன், அங்கிருந்து கட்டார் எயார்வேஸுக்குச் சொந்தமான QR 664 எனும் விமானத்தின் மூலம் நேற்று கொழும்பு வந்தடைந்துள்ளார்.


குறித்த பயணி மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தீவிர விசாரணைகளில், சந்தேகநபர் விழுங்கி தனது உடலுக்குள் வைத்திருந்த 13 கொக்கைன் உருண்டைகளை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருளின் மொத்த நிறை சுமார் 161 கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் மதிப்பு சுமார் ரூ. 7.245 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. See less

No comments

Powered by Blogger.