Header Ads



இஸ்ரேலிய அணிக்கு எதிராக விளையாட மறுக்கிறேன்


அயர்லாந்து தேசிய அணியின் நட்சத்திர வீரர் ஜேசன் நைட்: நான் இஸ்ரேலிய  அணிக்கு எதிராக விளையாட மறுக்கிறேன் என அறிவிப்புச் செய்துள்ளார். இந்தப் போட்டி ஒருபோதும் நடத்தப்படக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


'இஸ்ரேலுக்கு' எதிராக விளையாட வேண்டியிருப்பதை தனது வீரர்களில் சிலர் சங்கடமாக உணர்வதாக அயர்லாந்து பயிற்சியாளர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.


அயர்லாந்து கால்பந்து சங்கம் தங்களது டிக்கெட் ஒதுக்கீட்டின் பங்கைப் பெற மறுத்ததைத் தொடர்ந்து, இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அயர்லாந்து ரசிகர்களுக்கு வழங்கப்படாது.


பலஸ்தீனத்திற்கு ஆதரவான மிகப்பெரும் சக்தியாக அயர்லாந்து நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.