Header Ads



வசீம் தாஜுதீன் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட 3 வாகனங்கள்


றகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட, படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக 3 வாகனங்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி, பல குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஜனாதிபதி செயலகம் ஊடாக ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பிற்காக இந்த 3 கெப் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.


WP PD 79--, WP PD 80--, WP GB 05-- இலக்கங்களைக் கொண்ட இந்த 3 கெப் வாகனங்களும் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


 வசிம் தாஜுதீன் கொல்லப்பட்ட 2012ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி இரவில் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த WP LV 05--, WP PD 13--, WP KA 98--, WP KD 01--, WP PA 72-- ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் தொடர்பிலும் விசாரணைப் பிரிவினர் விரிவான தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். (TW) 

No comments

Powered by Blogger.