ஞானசாரருக்காக 50 இலட்சம் கையொப்பங்கள்
ஞானசார தேரருக்கு, மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் விசேட பிரசாரம் இன்று (26) மிஹிந்தலையில் தொடங்கியது. மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மற்றும் மகா சங்கத்தினர் இந்த மனுவில் முதற்கட்டமாக கையெழுத்திட்டனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விசேட கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், மிஹிந்தலை என்பது உலகிற்கே அபயதானத்தை (உயிர்ப்பிச்சை) அறிமுகப்படுத்திய புனித பூமி என்பதால், இந்த மனுவில் கையெழுத்துக்களைத் திரட்டி, மகாநாயக்க தேரர்கள் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விகாராதிபதி தெரிவித்தார்.

Post a Comment