பொலிஸாரின் பொறுப்புமிக்க பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி
இலங்கை பொலிஸாரின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (3) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார கலந்து கொண்டார்.
கடந்த 160 வருட காலப்பகுதியில் நாட்டின் பொதுமக்கள் அனர்த்தங்களை எதிர்நோக்கிய அனைத்து சந்தர்ப்பங்களிலும், இலங்கை பொலிஸ், பொதுமக்களுக்காகவும் இந்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காகவும் ஆற்றிய பொறுப்புமிக்க பங்களிப்பை பாராட்டி பேசினார்
இலங்கை பொலிஸை மிகச் சிறந்த கௌரவத்துக்குரிய சேவையாக மாற்றியமைப்பதற்காக முறையான பதவி உயர்வு முறை உருவாக்கப்படும் என்றும், அடுத்த வருட நடுப்பகுதிக்குள் புதிய சீருடை வழங்க எதிர்பார்ப்பதாகவும், ஆபத்துக் கொடுப்பனவு வழங்குவதுடன் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

Post a Comment