தற்போதைய அரசாங்கம் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே கண்டுள்ளது
கடந்த காலத்தில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே கண்டுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், கொலைகள் மற்றும் பிற கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது திறம்பட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளன என்று அந்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.

Post a Comment