குடு சலிந்துவுக்கு எதிரான கோப்புகளை காணவில்லை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 2 வழக்குக் கோப்புகள் காணாமல் போயுள்ளது.
இது தொடர்பாக ஏழு பெண் அதிகாரிகள் உட்பட பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பானந்துறை பிரிவு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன கோப்புகளில் ஒன்று பானந்துறை வடக்கு பகுதியில் குடு சலிந்துவின் தூண்டுதலின் பேரில் நடந்ததாகக் கூறப்படும் கொலை வழக்கு தொடர்பானது என தெரிவிக்கப்படுகிறது.
மற்றொன்று குற்றப் புலனாய்வுத் துறையினால் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment