முஸ்லிம் சமூகத்திற்காக உள்ள, ஒரேயொரு அரச நிகழ்வு
தேசிய மிலாதுன் நபி அரச விழாவானது, தேசிய அளவில் முஸ்லிம் சமூகத்திற்காக உள்ள ஒரேயொரு அரச மட்டத்திலான நிகழ்வாகும். இது தேசிய அளவில் சமயக் கல்வி மற்றும் முஸ்லிம் கலாச்சார தொடர்பான மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதற்கெனப் போதுமான தேசிய நிதியும் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்படுகிறது என பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.
42-வது தேசிய மீலாதுன் நபி அரச விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கம்பஹ மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 487 மாணவர்களுக்குப் பதக்கங்கள், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் விழா, 2026 செப்டம்பர் 3 ஆம் திகதியன்று மினுவாங்கொட வலயக் கல்வி அலுவலக நடைபெற்ற போதே பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பிரதி சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் . ருவான் திலக ஜெயகோடி, மினுவாங்கொட நகர முதல்வர் திஅசங்க சஞ்சீவ, கியோர் உட்படப் பெரும்பாளோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் கம்பஹ மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.¨

Post a Comment