Header Ads



உலக வரைபடத்தில் மிகப்பெரிய தவறு - மாற்றியமைப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்பு


புவியியல் அளவீட்டுப் பிழைகளைத் திருத்தும் நோக்கில், நாடுகளின் உண்மையான ஒப்பீட்டு அளவுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் புதிய உலக வரைபடத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.


வாக்கெடுப்பில் 164 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன; 6 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தன. அமெரிக்கா மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தது.


1569 ஆம் ஆண்டில் ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட மெர்கேட்டர் வரைபட முறையில் உள்ள திசைமாற்றப் பிழைகளைக் களைவதும் இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கங்களாகும். இந்த மெர்கேட்டர் முறையில் நிலநடுக்கோட்டிலிருந்து தூரமாகச் செல்லச் செல்ல நாடுகளின் பரப்பளவு பெருப்பிக்கப்பட்டு காட்டப்படுகிறது.


உதாரணமாக, கிரீன்லாந்து, ஆபிரிக்காவைப் போலப் பெரியதாக இதில் காட்டப்படுகிறது, ஆனால் உண்மையில் ஆபிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது.

No comments

Powered by Blogger.