Header Ads



ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் - மௌனமாக இருந்தவர் நீதிபதியிடம் இன்று கூறியவை



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் தற்காப்புச் சாட்சியமளிக்காது மௌனமாக இருந்து இன்று (22) குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 6ஆவது சந்தேகநபரான மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து திறந்த நீதிமன்றத்தில் பின்வருமாறு கருத்துக்களை முன்வைத்தார்:


"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் மூவருக்கும் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி இல்லை என்று நான் நினைக்கிறேன். மனசாட்சிக்கு உட்பட்டு உங்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று எனக்குப் புரிகிறது. முதல்முறையாக நான் பேசுகிறேன்.


மௌனமான கொள்கையையே நான் பின்பற்றினேன்.


அல்லாஹ் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். நான் குற்றவாளியானேன். அந்த நிலையிலும் என்னைப் பற்றி மகிழ்ச்சியடைகிறேன். 


நாட்டில் நிலவும் சூழ்நிலை பெரிதும் செல்வாக்கு செலுத்துகிறது.


 பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எங்கள் குடும்பத்திலிருந்து நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும். இந்தச் சம்பவத்தை நான் செய்ததாக யாராவது கூறினால், அதை இறைவன் பார்த்துக்கொள்வான்.


நீதியை நிலைநாட்டும் ஒரேயொரு வாய்ப்பாவது கிடைத்தால், நான் வென்ற தேசத்திற்காக நீதியை நிலைநாட்டுவேன். இதில் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள். நெருப்பில்லாமல் புகையாது. 


இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வெளியே இருக்கும் நபர்கள் பிரச்சினைகளை தலையில் சுமந்துகொண்டு தீப்பற்றி எரிவது போல் இருக்கிறார்கள். இன்று எம்முடன் விடுதலையாகிச் சென்றவர்கள் அழுதுகொண்டே சென்றார்கள். ஆனால் நாங்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போதிலும் சிரித்துக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டோம்.


இப்படிப்பட்ட ஒரு வழக்கு விசாரணையைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள். எனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தாயாருக்கு எழுபத்தைந்து வயது. தங்கை சாதாரண தரம் முடித்துள்ளார். ஆனால் நான் அவற்றைப் பற்றி யோசிப்பதில்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


நாங்கள் செய்யாத தவறுக்கு ஏன் எங்களை ஆளாக்கினீர்கள் என்பதே எனக்குக் கூற உள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை வழங்க நான் விரும்புகிறேன். அதாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டும்."


நன்றி - சூரியன்

No comments

Powered by Blogger.