Header Ads



சிறைச்சாலைக்குள் மோதல்


சிறைச்சாலை காவலில் இருந்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோருக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவத்தில் ‘கெஹெல்பத்தர பத்மே’ சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

No comments

Powered by Blogger.