Header Ads



உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்த ஜனாதிபதி தலைமையில் கூட்டம்

 
மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


உள்ளூராட்சி மன்றமொன்றினால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துப் பணிகளையும் இனங்கண்டு, அவற்றில் டிஜிட்டல் கட்டமைப்புக்குள் உள்ளடக்கக்கூடிய மற்றும் உள்ளடக்க முடியாத சேவைகள் எவை என வேறுபடுத்திக் கொள்ளுமாறும், தற்போதுள்ள கட்டமைப்புகளினால் அந்த அனைத்து சேவைகளும் உள்ளடக்கப்படுகின்றதா என்பதை கண்டறியுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.


பிரதேச செயலக டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தொகுதியாக (Module) அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

No comments

Powered by Blogger.