யாழ்ப்பாணத்தில கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் குறித்து பிரதியமைச்சர்
யாழ்ப்பாணம் - குசுமன்துறை கடற்கரையில் இன்று (27) கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மொத்தப் பெறுமதி 1.5 பில்லியன் ரூபாய் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மொத்த அளவு சுமார் 81 கிலோகிராம் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்குள் சுமார் 35 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 45 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், அண்மைய காலங்களில் வடக்கிலிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment