கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் நாமல்
குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அச்சம் நியாயமானதே என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்ஷவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும். என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment