சுவிற்சர்லாந்தில் இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கதிற்காக சில, மணி நேரங்களில் குவிந்த பல இலட்சம் ரூபாய்கள்
(A.A. Mohamamed Anzir)
இலங்கை மருதமுனையைச் சேர்ந்த ஒரு சகோதரர் கடந்த வாரம் சுவிஸ் - லுசேர்ன் நகரில் திடீரென மரணமடைந்திருந்தார். அதுபற்றிய தகவலை www.jaffnamuslim.com புகைப்படத்துடன் பதிவேற்றியிருந்தது.
இவருக்கு சுவிஸ் நாட்டில் குறிப்பிடதக்க பதிவுகளோ, வங்கி சேமிப்போ இல்லை. தனியாக வாழ்ந்துள்ளார். அவருடைய ஜனாஸா எரிக்கப்பட்டு விடுமோ என்ற கவலை சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களிடம் மேலோங்கியது.
இலங்கைப் பெறுமதியில் சுமார் 32 இலட்சம் ரூபாய்கள் ஜனாஸா நல்லடக்கத்திற்கு தேவையென ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டு, அதுபற்றிய அறிவிப்புகளும் வெளியானது. அல்ஹம்துலில்லாஹ் எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட, அதிக தொகை சில மணித்தியாலங்களிலேயே குவிந்தது. நிதி சேகரிப்பு பங்களிப்பை SRI LANKA SWISS CULTURAL ASSOCIATION (SLSKV) வழங்கியது.
சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் என்றில்லாமல், சுவிஸில் வசிக்கும் வேறு நாட்டு முஸ்லிம்களும் தம்மால் முடிந்த பணத் தொகையை அன்பளிப்புச் செய்தமையும் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இருந்துகூட மக்கள் பணத்தை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா நல்லடக்கமும் நல்லமுறையில் 02.09.2026 இடம்பெற்று முடிந்தது.
மிககுறுகிய நேரத்தில் அவ்வளவு பெரிய பணத்தை திரட்டியமை இங்கு கவனிக்கத்தக்கது. இவ்விடயத்தில் பங்களித்த சகோதர, சகோதரிகள், பாடுபட்டவர்கள் அனைவருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், வாழ்க்கை தொழில் ஆரோக்கியம் என அனைத்திலும் அல்லாஹ் பறக்கத் செய்யட்டும்.
அன்புள்ள உறவுகளே, இலங்கையை விட்டு நீங்கள் எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்குள்ள நமது உறவுகள், அமைப்புக்கள், பள்ளிவாசல்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளுங்கள். அது சிறந்தது சிறந்தது...

Post a Comment