Header Ads



'அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்' என்றே நாம் அல்லாஹ்வைப் போற்றுகிறோம்


அல்லாஹ்வின் அளப்பரிய கருணை மீது நான் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். 'அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்' என்றே நாம் அல்லாஹ்வைப் போற்றுகிறோம். நாம் மனிதர்களின் பலவீனங்களை அணுகும்போது, மேற்சொன்ன நற்பண்புகளே நம்மை வழிநடத்தவேண்டும். ஒருவரது நம்பிக்கை மற்றும் உண்மையான மனமாற்றம் குறித்த இறுதித்தீர்ப்பு எல்லாம் வல்ல இறைவனுடையதாகவே இருக்கவேண்டும்.


அனோஜன் தனது சமூக ஊடகப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டு, காணொளி ஊடாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் என்ற செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படவேண்டியவை ஆகும். வேதனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருத்து, ஒரு மனிதன் மனம் திருந்தி, தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இல்லாமலாக்கி விடக்கூடாது.


இந்நிலையில் கருணை காண்பித்து அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நான் சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு அனோஜனுக்கு அவசியமான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், உடனடி இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.


(தமிழரசுக்கட்சி செயலாளர் எம்.ஏ. சுமந்திரன்)

No comments

Powered by Blogger.