Header Ads



70 வயது முதியவர், 48 கடவுச்சீட்டுகளை வைத்து என்ன செய்தார்..?


போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக மற்றவர்களுக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த (70 வயது) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடவுச்சீட்டுகள், பணத் தாள்களின் பாதுகாப்பு அடையாளங்களைப் பரிசோதிக்கும் போலி இயந்திரம் ஒன்று மற்றும் ஸ்மார்ட் ரக கைத்தொலைபேசி ஒன்று என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


சுற்றுலா விசா மூலம் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல முற்படும் நபர்கள், இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர் என்பதைக் காட்டும் வகையில், பழைய கடவுச்சீட்டுகளில் உள்ள விசா பகுதிகளை நீராவியைப் பயன்படுத்திச் சூட்சுமமாகப் பிரித்தெடுத்து, புதிய கடவுச்சீட்டுகளில் போலியாக ஒட்டியுள்ளார்.


இதற்காக ஒரு நபரிடமிருந்து 20,000 ரூபாய் வீதம் கட்டணமாகப் பெற்றுள்ளதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.