அனோஜன் விவகாரத்தில் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்
அனோஜன் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவேற்றம் செய்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துடன் அமைச்சின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் முழுமையான நடவடிக்கைகளை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம். நாடு என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Post a Comment