"பூத களுவா" வெட்டிக்கொலை
பாதாள உலகக்குழு உறுப்பினரான கொஸ் மல்லியின் மைத்துனரான "பூத களுவா" என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) அ இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையானவர் தெஹிவளை ஓபன் பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதுடைய நபராவார்.
இவர் கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

Post a Comment