Header Ads



நாமலின் மனைவி குறித்து பரப்பப்படும் வதந்திகள்


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.


அதில் முக்கியமானதாக நாமல் ராஜபக்சவின் மனைவி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக அதிகளவில் பேசப்பட்ட வந்த நிலையில், அதனை நாமலின் ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது. அரசியல்பகுப்பாய்வு


நாமல் மற்றும் அவரது மனைவி தொடர்பிலான செய்திகள் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


சமூக வலைத்தளங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நாமல் ராஜபக்ச சுகயீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அத்துடன், மற்றுமொரு பேஸ்புக் பக்கம் ஊடாகப் பரவிய பதிவில், நாமல் ராஜபக்சவின் இடத்தை நிரப்புவதற்காக அவரது மனைவி லிமினி ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுரராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் மேடையில் ஏறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.


மற்றுமொரு செய்தி இணையத்தளம், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவிகளான சிறிமா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைப் போல பலத்தன்மை வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. செய்திசேவை


அத்துடன் அவரது வருகை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு பகிரப்படும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


குறித்த தகவல்கள் முழுமையாக திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரச்சாரங்கள் என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்துகிறது.

No comments

Powered by Blogger.