இறுதிக் கிரியைக்கு சென்ற தாயும், மகனும் உயிரிழப்பு
அனுராதபுரத்தில் - மரிதன்கடவல நகரில் நேற்று (9) இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியை நிகழ்விற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது.
Post a Comment