விபத்தில் 22 பேர் காயம்
பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (10) விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment