Apple தனது வரலாற்றில் முதன்முறையாக
Apple நிறுவனம் தனது வரலாற்றில் முதன்முறையாக 'ஐபோன் டுயோ' (iPhone Duo) எனும் புதிய மடிக்கும் கைபேசியை கலிபோர்னியா - ஸ்டீவ் ஜோப்ஸ் அரங்கில் நடைபெற்ற Apple event நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய மடிக்கும் கைபேசியின் வெளிப்புறத் திரை 5.4 அங்குலமாகவும், விரித்தவுடன் ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரியதான 7.6 அங்குலத் திரையைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டொலர்களில் தொடங்குகிறது. இதன் முன்பதிவுகள் எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட ஏ20 (A20) சிப் மற்றும் அதிக மின்கல ஆயுளுடன் கூடிய ஐபோன் 18 ப்ரோ தொடர் கைபேசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் ப்ரோ வகைகளின் விலை 100 டொலரால் அதிகரிக்கப்பட்டு, ஐபோன் 18 ப்ரோ 1,199 டொலருக்கும், ப்ரோ மெக்ஸ் 1,299 டொலருக்கும் விற்கப்படவுள்ளன.
எதிர்வரும் 12 முதல் முன்பதிவு செய்யப்படும் இவற்றுடன், சத்தம் குறைக்கும் வசதிகொண்ட ஏர்போட்ஸ் 5 (AirPods 5) சாதனங்களும் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
Post a Comment