நாமல் ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால்..?
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை. ராஜபக்ஷக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்
நாமல் ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் ஆதரவு இரட்டிப்பாகும் என்று சிலர் கூறுவது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒரு கதையாகும். ராஜபக்ஷக்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் கைது பற்றிப் பேசுகிறார்கள். அநுராதபுரத்தில் பேரணிகளையோ அல்லது வேறு எங்கு என்ன கூட்டங்களை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவான தீர்மானத்தில் இருக்கிறார்கள்.
அரசியல் நாடகங்களுக்கும் மேடைக் பேச்சுக்களுக்கும் கட்டுப்பட்டு இலங்கையின் சுயாதீன நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளையோ சட்ட நடவடிக்கைகளையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்கள் செப்டம்பர் 12-ஆம் திகதியோ அல்லது 13, 14, 15 ஆகிய திகதிகளிலோ பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தினாலும், அரசாங்கத்திற்கும் சட்ட நடவடிக்கைக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை
அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Post a Comment