Header Ads



சிறுநீரக ​வைத்தியசாலையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு - 7 பேர் காயம்


பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். 


வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.