Header Ads



கனடாவில் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36வது நினைவு தின நிகழ்வுகள்


2026 அக்டோபர் 30ஆம் திகதி இடம்பெறவிருக்கும் வடக்கு முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36வது நினைவு தின நிகழ்வுகள், இம்முறை கனடாவில் வாழும் வடக்கு முஸ்லிம் மக்களின் அமைப்பினால் கனடாவின் டொரோண்டோ நகரில் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.


இந்நிகழ்வில் வடக்கு முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதுடன், அதற்கேற்ற வகையிலான சர்வதேச செயற்திட்டமொன்றும் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


முஹம்மது நியாஸ் அமீர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.


நிகழ்வின் இறுதியில் உரிமைப் பிரகடனம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.