Header Ads



கோட்டாபயவுக்கு 33,000 ஆண்டுகள் தண்டனை விதிக்கவேண்டும்


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நௌபர் மௌலவிக்கு 16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமானால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு 33,000 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய வழக்குத் தீர்ப்பின் மூலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 15 பேருக்கும், தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு புரிந்த குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்தத் தீர்ப்புடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் முடிவுக்கு வந்துவிடவில்லை, இத்தாக்குதலை வழிநடத்திய, திட்டமிட்ட, பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரிகள், சதியாளர்களின் பட்டியல் இன்னமும் வெளிவர வேண்டியுள்ளதாகவும் திலகசிறி மேலும் வலியுறுத்தியுள்ளார்.


No comments

Powered by Blogger.