Header Ads



கூட்டங்களுக்கு வருபவர்களுக்குப் நாங்கள் பணமோ, உணவுப் பொதிகளையோ வழங்குவதில்லை


இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு "தந்தை மற்றும் முன்னோர்களிடமிருந்து பிள்ளைகளுக்குக் கைமாறும் குடும்ப அரசியல் முறை" இப்போது முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அரசியல் மாற்றத்தில் புதிய மற்றும் இளம் தலைமுறை களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு வாரிசு அரசியல் கலாச்சாரம் ஏற்புடையதல்ல.


நாங்கள் எப்போதும் கிராமமட்டத்தில் மக்களுடன் இணைந்து அரசியல் செய்தவர்கள் என்பதால், கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்ப்பதில் தமக்கு எவ்வித சவாலும் இல்லை.


களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே நாளில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை, NPP அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரும் கூட, தமக்கென எதையும் எதிர்பார்க்காமல் நாட்டுக்காக உழைக்கத் தயாராக இருக்கும் மிகப்பெரிய ஆதரவாளர்கள் எங்களுடன் உள்ளனர்.


ஏனைய கட்சிகளைப் போன்று கூட்டங்களுக்கு வருகை தருபவர்களுக்குப் பணமோ அல்லது உணவுப் பொதிகளையோ வழங்குவதில்லை. தங்களது ஆதரவாளர்கள் சொந்தச் செலவில் பேருந்துகளை ஏற்பாடு செய்து கொண்டு, மிகுந்த ஒழுக்கத்துடன் அரசியல் அறிவைப் பெற்றுக்கொள்வதற்காகவே கூட்டங்களுக்கு வருகை தருகின்றனர்.


JVP செயலாளர் ரில்வின் சில்வா 

No comments

Powered by Blogger.