Header Ads



மனித உரிமைகளைப் பாதுகாக்க குரல் கொடுத்த தலைவராக முஹம்மது நபி போற்றப்படுகிறார் - பிரதமர் ஹரிணி


சமத்துவத்திற்கு முன்னுரிமை அளித்தல், ஆதரவற்றவர்களைக் கவனித்தல், அடிமைத்தனத்தை ஒழித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்த தலைவராக முஹம்மது நபி அவர்கள் கருதப்படுகின்றார். 


அத்துடன், இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரமான அல்-குர்ஆனையும், முன்மாதிரியான சுன்னாவையும் வழங்கிய மகத்தான போதகராகவும் அவர் வரலாற்றில் போற்றப்படுகின்றார்  என பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 மீலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.