Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் தண்டனை பெற்ற 15 கைதிகளின் நிலவரம்


உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட 15 கைதிகளும் வெவ்வேறு சிறை அறைகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் அண்மையில் 200 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்த 15 கைதிகளின் செயற்பாடுகள் குறித்து சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்தக் கைதிகள் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உட்கொள்வதுடன், ஏனைய கைதிகளுடன் சுமுகமாக உரையாடுவதாகவும் தெரியவந்துள்ளது.


 இந்த 15 பேருக்குச் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.