A/L பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களுக்கு பாராட்டு
A/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாவட்ட மட்டத்தில் பாராட்டுவதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் முதல் நிகழ்ச்சி, கிளிநொச்சியில் நடைபெற்றது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 3,000 க்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை பாராட்டப்படுவதுடன், ஒவ்வொரு மாணவருக்கும் 100,000 ரூபா நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இதன்படி, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய 05 மாவட்டங்களில் 06 பாடப்பிரிவுகளின் கீழ் முதல் இருபது இடங்களைப் பெற்றுக் கொண்ட 480 மாணவர்கள் இதன்போது பாராட்டப்பட்டனர்.




Post a Comment