திருமணமான ஆண்களிடையே பாலியல் ஈடுபாடு குறைந்து வரும் போக்கு
திருமணமான ஆண்களிடையே அண்மைக்காலமாக பாலியல் ஈடுபாடு குறைந்து வரும் போக்கு காணப்படுவதாகவும், இது குடும்ப வாழ்க்கை மற்றும் தம்பதியரின் பரஸ்பர உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆங்கில தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நவீன வாழ்க்கை முறையில் நிலவும் கடுமையான மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி, அதிக பணிச்சுமை மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகளவில் அடிமையாதல் போன்ற காரணிகளே இந்த நிலைமை உருவாவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், அது நீண்டகால அடிப்படையில் குடும்ப முறிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், தம்பதியினர் தங்களுக்குள் திறந்த மனதுடன் கலந்துரையாடுவதும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உரிய தொழில்முறை உளவியல் ஆலோசனைகளைப் பெறுவதும் அத்தியாவசியமானது என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (Via - Hiru)

Post a Comment