Header Ads



135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்க முயன்ற மகிந்தவின் மகன்கள்


135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை  தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் 2 மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு தீர்மானித்துள்ளது.


3  வர்த்தகர்களை பயன்படுத்தி தேயிலைத் தோட்டத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த மோசடி தொடர்பில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.