Header Ads



நாடு கடத்தப்பட்ட 'கொண்ட ரஞ்சி' பிடிபட்டான்


டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ இன்று (9) காலை  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் CID  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார்.


அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்டபோதிலும், பின்னர் மனைவியும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்ட  ஒரு நபர். 

No comments

Powered by Blogger.