சவூதி - மதீனாவில் யுரேனியம் அடங்கிய 110 மில்லியன் தொன் மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டது
சவூதி அரேபியாவின் மதீனா பகுதியில், யுரேனியம் அடங்கிய 110 மில்லியன் டன் மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சவூதி எரிசக்தித் துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சவூதி அரேபியா ஒரு அணுசக்தித் திட்டத்தைக் கொண்டிருப்பது குறித்த விமர்சனங்களையும் கவலைகளையும் சவூதி எரிசக்தித் துறை மறுத்தார்.
"சர்வதேச சமூகத்திடமிருந்து தனித்து, இரகசியமாக நடத்தப்படும் செயல்பாடுகள் மூலமாகவோ அல்லது மலைகளுக்குள் ஆழமாக மறைக்கப்பட்ட வசதிகள் மூலமாகவோ, சவூதி ஒரு அணுசக்தித் திட்டத்தை உருவாக்க முற்படவில்லை," என்று அவர் கூறினார்.
இது, பல தசாப்தங்களாக நீடித்து வரும் ஈரானின் நிலத்தடி அணுசக்தித் திட்டத்தைக் குறிப்பிடுவது போல் தெரிகிறது.

Post a Comment