அவர்கள் சோறு சாப்பிடும் மனிதர்களாக இருக்க முடியாது
நாட்டை வங்ரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக்க இந்நாட்டு மக்களுக்குத் பைத்தியம் எதுவும் இல்லை என என SJB தெரிவித்துள்ளது. ஹெஷா விதனகே Mp இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் உண்மையென்றால், அவர் பத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதைக் கூடத் தடுக்க முடியாது.
2029-இல் இவர்தான் நல்ல பையன் எனக் கூறி, அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு யாராவது ஆதரவாகக் கையை உயர்த்தினால், அவர்கள் சோறு சாப்பிடும் மனிதர்களாக இருக்க முடியாது.
தங்களைப் போல் அல்லாமல் ராஜபக்சக்களிடம் அதிகளவில் பணம் உள்ளது. அதனால், எந்நேரத்திலும் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிவந்து பிரம்மாண்டமான பேரணிகளை நடத்த அவர்களால் முடியும். ஆனால், அத்தகைய செயற்கையான கூட்டங்களைக் கண்டு அச்சப்படவோ அல்லது பெரிதாக யோசிக்கவோ தேவையில்லை ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

Post a Comment