இலங்கையின் அடுத்த அரகலய எங்கு தொடங்கும்..?
இலங்கையின் அடுத்தகட்ட அரகலய அல்லது மக்கள் போராட்டம் சிறைச்சாலை அமைப்பை மையமாகக் கொண்டு தொடங்குவதற்கான தீவிர அபாயம் நிலவுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக கண்டிக்கு விஜயம் செய்திருந்தபோதே, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் தீர்வு காணத் தவறினால், நாட்டின் அடுத்தகட்ட மக்கள் போராட்டத்தின் (அரகலய) ஆரம்பப் புள்ளியாக அதுவே அமையும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment