Header Ads



புத்தளம் ஸாஹிரா கல்லூரி பேருந்து கொள்வனவுக்காக (அபாபீல்) நிதியுதவி


புத்தளம் ஸாஹிரா கல்லூரி பேருந்து கொள்வனவுக்காக  (அபாபீல்) HelpingHands Muslims  நிதி கையளிக்கும் நிகழ்வு இன்று 09.08.2026 புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றுள்ளது.


அபாபீல் மசூறா குழு உறுப்பினர்கள், புத்தளம் ஸாஹிரா கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் இதில் பங்கேற்றனர்.


யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே முன்னணி சமூக சேவை அமைப்பாக செயற்படும் (அபாபீல்)  HelpingHands Muslims அமைப்பு 1990 இல், தமக்கு அடைக்கலம் தந்த புத்தளத்திற்கு செய்யும் நன்றிக் கடனாக கருதி,  புத்தளம் ஸாஹிரா கல்லூரி, பேரூந்து கொள்வனவுக்கு தம்மால் முடிந்த உதவியை நல்கியமை குறிப்பிடத்தக்கது.








No comments

Powered by Blogger.