Header Ads



சூர்யவன்சிக்கு எத்தனை வயது..?


இந்திய அணியின் இளம் அதிரடி துடுப்பாட்டக்காரர் வைபவ் சூர்யவன்சியின் உண்மையான வயது குறித்த சந்தேகங்கள் இந்தியாவிற்கு வெளியே இன்னமும் நீடிப்பதாகதாகவும், இருப்பினும், அவரது வயது முக்கியமல்ல என்றும், அவரது திறமையே முதன்மையானது என்றும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.


"இந்தியாவிற்கு வெளியே உள்ள பலரும் 'அவருக்கு உண்மையில் 15 வயதுதானா?' என்று என்னிடம் கேட்கிறார்கள். உலகளவில் தற்போது இதுவே பெரிய விவாதப் பொருளாக உள்ளது" 


"அவருக்கு 15 வயதாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி. ஒருவேளை 17 அல்லது 18 வயதாக இருந்தாலும் அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? அந்தச் சிறுவனால் மிகச் சிறப்பாகக் கிரிக்கெட் விளையாட முடிகிறது, அதுவே முக்கியமானது" என்று பிரெட் லீ கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.