கஞ்சா பாவித்துவிட்டு விமானம் ஓட்டிய விமானி
ஆகஸ்ட் 4 அன்று, கடுமையான காற்றுச் சுழற்சி (Turbulence) காரணமாக ஏர் இந்தியாவின் பூக்கெட்-டெல்லி விமானம் 300 அடி கீழே இறங்கியதாகவும், இதனால் 13 பயணிகள் மற்றும் நான்கு விமானப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விமானிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கஞ்சா பயன்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அப்பரிசோதனை அறிக்கையைத் தாங்கள் இன்னும் பார்க்கவில்லை என்று ஏர் இந்தியா கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் மற்றும் இது தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் (DGCA) விசாரணை நடத்தி வருகிறது.

Post a Comment