இறையழைப்பை ஏற்று மறுமைப் பயணத்தில் முந்தினார்
கேரளா மலப்புறம் மாவட்டம் வாளஞ்சேரி சேர்ந்த சாலிஹ் 80சதவீதம் அங்கவீனமுள்ள மாற்றுத்திறனாளி.
நடக்க முடியாத நிலையில் வீட்டுக்குள் உருண்டு உருண்டு தனது தேவைகளை பூர்த்தி செய்தவர். தனது இயலாமையையே முதலீடாக வைத்து மலையாளிகளின் மனம் கவர்ந்த யூட்யூபராக வலம் வந்தவரை குறுகிய காலத்தில் பத்து லட்சம் பேர் பின்தொடர்ந்தது ஆச்சரியம்.
ஆரம்பத்தில் தனது அன்றாட வாழ்வை காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பது, ஃபஜ்று தொழுகைக்கு உலூ செய்து தொழுவது, படுத்தபடியே உண்பது, உடைமாற்றுவது, வெள்ளிக்கிழமை தனது நண்பர் யூசுப் உதவியுடன் ஜும்மா பள்ளிவாசல் செல்வது உட்பட வீடியோ பதிவு செய்து வெளியிட்டது சாலிஹை ஒரு செலிபிரிட்டி ஆக்கியது.
படிப்படியாக சாலிஹ் யூட்யூப் சேனல் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பத்து லட்சம் கடந்தது.
மலபார் பகுதி நிறுவனங்கள் சாலிஹை அழைத்து தங்கள் தயாரிப்புகளை அவர் மூலம் ப்ரமோட் செய்ததன் மூலம் ஓரளவு வருமானம் வந்தது..
கேரளாவின் அரசியல், சினிமா, மார்க்க அறிஞர்கள் உட்பட பலரும் சாலிஹின் நெருங்கிய தொடர்பில் வந்தனர்..
ஆறு வருடங்கள் முன்பு ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்மணி அவரின் உடல்நிலை தெரிந்தும் ஸாலிஹை விரும்பி திருமணம் செய்து கொள்ள அதன்பின் அவரின் வாழ்க்கையில் வசந்தம் வீசத்துவங்கியது.
இரண்டு குழந்தைகளுடன் சாலிஹ் தம்பதியர் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக கடந்து சென்றது.
ஒருவாரம் முன்பு வரை அவரின் சமூக வலைத்தள பக்கங்கள் செயல்பட்டு வந்த நிலையில் காய்ச்சல் பாதித்த சாலிஹ் இன்று (29) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மதியம் வஃபாத் ஆனார் எனும் தகவல் வெளியாகி மலையாள சமூக வலைத்தளங்களில் நிறைந்து காணப்படுகிறார்.
அல்லாஹ் மஃபிறத் அருள்வானாக...
அவரின் மனைவி பிள்ளைகளுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக
Colachel Azheem

Post a Comment