விபத்தில் உயிரிழப்பு
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் நேருக்கு நேர் மோதியதில் பலியாகியுள்ளார்
குறித்த சம்பவம் (29) மாலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞர் வயது (24) தம்பலாகாமம்,பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரியவருகிறது.
உயிரிழந்த சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். See less
Post a Comment