இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என நினைப்பவர் இந்துவாகவே இருக்க முடியாது
இந்து ராஷ்டிரம் என்பது முஸ்லிம்களைத் தவிர்த்தது அல்ல என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று நினைப்பவர் யாராக இருந்தாலும் அவர் இந்துவாகவே இருக்க முடியாது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
உங்களை ஒரு இந்து என்று நீங்கள் அழைத்துக்கொள்ள விரும்பினால், அனைத்துப் பாதைகளும் ஒரே இறைவனையே சென்றடைகின்றன என்பதை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும். மதச் சடங்குகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதநேயம் ஒன்றே என்பதைத்தான் இந்தியக் கலாச்சாரம் நமக்குக் கற்பிக்கிறது. வெவ்வேறு மத நடைமுறைகள் இறுதியில் ஒரே உண்மையையும் இறைத் தன்மையையுமே அடைகின்றன" என்று குறிப்பிட்டார்.
அதேவேளையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அமெரிக்கப் பயணத்துக்கு சில மனித உரிமை அமைப்புகளும், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானியும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தனர்

Post a Comment