கைது செய்யப்படுவாரா சாகர
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக சாகர காரியவசம் விடுத்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
சாகர காரியவசம், நாட்டின் 37 ஆவது காவல்துறை மா அதிபரான இவர், வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ் மா அதிபராக வரலாற்றில் இணைவதை தான் காண விரும்பவில்லை’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால, அரசாங்கம் இவ்வாறான கருத்துக்களை இலகுவாக எடுத்துக்கொள்ளாது எனவும், இதுகுறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரத்துக்காக கடந்த காலங்களில் மக்களை பலிகொடுத்த ஒரு அரசியல் இயக்கத்தின் மனநிலையே இவ்வாறான கூற்றுகளில் பிரதிபலிப்பாகும். சாகர காரியவசத்தின் இந்தக் கருத்து முற்றிலும் பொறுப்பற்ற ஒரு செயல் ஆகும்.

Post a Comment