முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு துயரமான முடிவு
முன்னாள் அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாராவார்.
அவர்களுக்குச் சொந்தமான, புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை (19) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலம் தனமல்விலவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. See less

Post a Comment